×

எஸ்.வி.மங்களத்தில் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம்

பரமக்குடி, டிச.11: நயினார்கோவில் வட்டார வேளாண்மை துறை சார்பாக விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் எஸ்.வி.மங்களத்தில் நடைபெற்றது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் உதவி இயக்குனர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயந்தி மாலா வரவேற்றார். வேளாண்மைத் துறை திட்டங்கள், கூட்டு பண்ணையம், உணவு பயிர்களை சந்தைப்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் தொழில் நுட்பம், நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் சுசிலா விளக்கினார்.

இயந்திர பராமரிப்பு, பண்ணை குட்டை அமைத்தல், நுண்ணீர் பாசனம் மற்றும் சூரிய ஒளியினால் இயங்கும் பம்பு செட்டுக்கள் அமைத்தல் போன்றவை குறித்து வேளாண்மை உதவி பொறியாளர் சுப்பிரமணியன் எடுத்துரைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா மண்வள அட்டை மற்றும் உர மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். தேனீ வளர்ப்பு மற்றும் உர மேலாண்மை எலி ஒழிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் கொடுக்கப்பட்டது. கலந்து கொண்ட 60 விவசாயிகளுக்கு மண்வள அட்டை, வேளாண் இடுபொருள்கள், காய்கறி வினியோகம் செய்யப்பட்டது. முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துக்குமரவேலு நன்றி கூறினார்.


Tags : Farmers Welfare Movement ,SVM ,
× RELATED தேர் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 9 பேர் காயம்