×

நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணம் வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம், டிச.11: ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் நிறுவன தலைவர் சையத் பசீர் தலைமையில் நிறுவனத்தின் களப்பணியாளர்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில், தமிழகத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று கடந்த 1993ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை சுமார் 85 லட்சம் பொதுமக்களிடமிருந்து சுமார் 10 ஆயிரம் கோடி அளவிலான சேமிப்பு தொகையை சேகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில் முதிர்வு தொகையை முறையாக திருப்பி அளித்ததால் முதலீட்டாளர்களாகவும், கமிசனுக்காக களப்பணியாளர்களாகவும் பலர் சேர்ந்தனர்.

அரசின் விதிமுறைக்கு மாற்றாக செயல்படுவதாக கூறி கடந்த 2014ம் ஆண்டு செபி ஆணையத்தால் இந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 5 வருடங்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முதிர்வு தொகை வழங்கப்பட வில்லை. செபி அமைப்பு ரூ.2 ஆயிரத்து 500க்குள் பணம் கட்டியவர்களை மட்டும் மார்ச் 2018க்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தியது. இந்த நிறுவனத்தில் ரூ.2 ஆயிரத்து 500 சேமிப்பு தொகையே கிடையாது. இதுதவிர ஆன்லைனில் பதிவு செய்வதில் பல சிக்கல்கள் இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பதிவு செய்ய முடியவில்லை. 5 ஆண்டுகளாக பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம்  களப்பணியாளர்களுக்கு பல சிரமங்கள் வருகின்றன. இதனை தமிழக அரசு செபியின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து முதலீட்டாளர்களுக்கும் காலதாமதமின்றி சீனியாரிட்டி அடிப்படையில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags : institution ,
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு