அரசு அலுவலகங்களில் ஹெல்மெட் கட்டாயம்

திண்டுக்கல், டிச. 11: அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து வர வேண்டுமென்ற உத்தரவு அமலுக்கு வந்தது.  ஐகோர்ட் மதுரைக்கிளை தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் பின்அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதை கட்டயமாக்கி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்து இறப்புகளை 100% குறைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் கலெக்டர் வினய் டிச. 11 முதல் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் டூவீலர் ஓட்டுபவர் மற்றும் பின் அமர்ந்து செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் அலுவலங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு டூவீலரில் வந்த அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து வருவது குறித்து கலெக்டர் வினய் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தலைக்கவசம் அணிந்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார். உடன் எஸ்பி சக்திவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related Stories: