×

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தால் சூற்றுச்சூழலுக்கு கேடு

திண்டுக்கல், டிச. 11: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களால் சூற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது என மனு அளிக்கப்பட்டுள்ளது. குஜிலியம்பாறை திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘‘குஜிலியம்பாறை ஒன்றியத்தில் மல்லாபுரம், ஆலம்பாடி, கரிக்காலி, உல்லியக்கோட்டை, கருங்கல் ஆகிய ஊராட்சிகளும்,  பாளையம் பேரூராட்சியும் உள்ளது. இப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அனுமதியின்றி இயங்கி வருகின்றன.  தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் சுண்ணாம்பு கற்களை வெளிமாவட்டங்கள் , வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்கின்றனர். இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.  இது அரசு அலுவலர்களின் அனுமதியோடு நடப்பதாக தெரிகிறது. இங்குள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கங்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதோடு குடிநீரும் மாசுபடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு காசநோய் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. எனவே அனுமதியின்றி இயங்கும் அரசு சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியதிருக்கும்’’ என கூறப்பட்டிருந்தது.

Tags : Union ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...