×

500 காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

திண்டுக்கல், டிச. 11: ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என மாடுபிடி வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மாடுபிடி வீரர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் நுழைவுவாயிலில் இருந்து ஊர்வலமாக குறைதீர் கூட்டத்திற்கு வந்து கலெக்டர் வினய்யிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ‘‘பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

போட்டியின் போது 500 காளைகள் மட்டுமே வாடிவாசல் வழியாக அவிழ்த்து விட வேண்டும். அதற்கு மேல் அனுமதி வழங்க கூடாது. பேட்ஜ் முறையில் மாடுபிடி வீரர்களை அனுப்பும் முறையை கைவிட வேண்டும். சீருடை கட்டணமாக வீரர்களிடம் ரூ.100 வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும். வீரர்களை அடிக்கவோ, அவமரியாதையாகவோ பேச கூடாது. 4 பற்களுக்கு மேல் உள்ள காளைகளை மட்டுமே களத்தில் அனுமதிக்க வேண்டும். கன்றுக்குட்டிகளை அவிழ்த்துவிட கூடாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இதில் மாடுபிடி வீரர்கள் நலச்சங்க மாநில தலைவர் முருகன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் நிர்மல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு