குடியிருப்புகளில் மதபிரசங்கம் செய்தால் நடவடிக்கை

திண்டுக்கல், டிச. 11: குடியிருப்புகளை மதபிரசங்கம் செய்யும் இடமாக மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் குருராஜன் எச்சரித்துள்ளார். பட்டிவீரன்பட்டி 11வது வார்டில் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்காக வரைபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பணி முடிவுற்ற நிலையில் கதவு எண் 11.1.23 sல் குடியிருப்பை வழிபாட்டு தலமாக மதபிரசங்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 1920 நகராட்சிகள் சட்டம் 191 (2) (பி) மற்றும் 1972ம் கட்டட விதிகள் பிரிவு எண் 6 (4)ன் கீழ் தண்டனைக்குரிய செயல்பாடு ஆகும். எனவே குடியிருப்பு என்று அனுமதி வாங்கி விட்டு மதபிரசங்கம் செய்யும் இடமாக மாற்ற கூடாது. சம்பந்தப்பட்டவர்க்கு இதுகுறித்து எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதர கட்டட உரிமையாளர்கள் இதில் உரிய கவனம் செலுத்தும்பட்டி பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் குருராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: