நிலக்கோட்டை பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

செம்பட்டி, டிச. 11: நிலக்கோட்டை பேரூராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நிலக்கோட்டை பேரூராட்சியின் பல்வேறு பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பிலிருந்து மாவட்ட மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஏராளமான மனுக்கள் வந்தன. மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்ற  பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி செயல் அலுவலர் கோட்டைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் 1, 3ம் வார்டுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர்கள் சங்கரேஸ்வரன், கலைவாணி மற்றும் போலீசார் சென்றனர்.அப்போது சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து அவர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Related Stories: