கொடைக்கானலில் மனித உரிமை தின விழா

கொடைக்கானல், டிச. 11: கொடைக்கானலில் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை அமைப்பின் சார்பில் நேற்று மனித உரிமை தின விழா கொண்டாடப்பட்டது. மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன், செயலாளர் சிராஜ்தீன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் தொகுதி தலைவர் ஜவகர், மாவட்ட பொது செயலாளர் ஆரோக்கியசாமி, நிர்வாகிகள் வெற்றிசெல்வன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: