×

சித்தையன்கோட்டையில் கேரள மட்டை அரிசி பயிரிட ஆர்வம்

பட்டிவீரன்பட்டி, டிச. 11: நல்லவிலை, முறைகேடு இல்லாமல் எடைபோடுவதால் சித்தையன்கோட்டையில் கேரள மட்டை அரிசியை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். பட்டிவீரன்பட்டி, வாடிப்பட்டி, சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்தாண்டு இப்பகுதிகளில் என்எல்ஆர், அட்சயா போன்ற நெல் ரகங்களையே நட்டனர். ஆனால் இந்தாண்டு கேரளா மட்டை அரிசியை அதிளவில் பயிரிட்டுள்ளனர். குறிப்பாக சித்தையன்கோட்டை விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கேரளா மட்டை அரிசியை பயிரிட்டுள்ளனர்.

இதுகுறித்து சித்தையன்கோட்டை விவசாயிகள் கூறியதாவது: அரசு கொள்முதல் நிலையங்களில் கிலோ நெல்லை ரூ.15.50 முதல் ரூ.16.50 வரை கொள்முதல் செய்கின்றனர். சில நேரங்களில் குடோனில் நெல் அதிகமாக தேங்கியுள்ளதாக கூறி கொள்முதலை பல வாரங்களுக்கு நிறுத்தி விடுகின்றனர். தவிர நெல் மூடைகளை வரிசைப்படி வைக்காமல் வேண்டியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். மேலும் எடை போடுவதில் துவங்கி வங்கி கணக்கில் கொள்முதல் செய்த நெல்லிற்கான பணத்தை வரவு வைப்பது வரை பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதேநேரத்தில் விளைந்த மட்டை அரிசி நெல்லை எங்களது களத்திலே சரியான எடைபோட்டு வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.20 என பணமும் உடனடியாக கிடைக்கிறது. இதனாலே கேரள மக்கள் விரும்பி உண்ணும் மட்டை அரிசியை பயிரிட்டு வருகிறோம்’’ என்றனர்.

Tags : Kerala ,Siddiyayankottai ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...