×

மார்க்கெட் எதிரே பார்க்கிங் மூடல்

ஊட்டி,டிச.11: ஊட்டி  மார்க்கெட் எதிரே உள்ள பார்க்கிங் மூடப்பட்டதால் தற்போது வாகனங்கள் சாலையோரமாக  நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சுற்றுலா நகரமான ஊட்டிக்கு  நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளுர் மக்கள் நாள் தோறும் வந்துசெல்கின்றனர். இவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங்  வசதிகள் இல்லை. ஏற்கனவே உள்ள பார்க்கிங்களையும் உள்ளூர் வியாபாரிகள்  ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதனால், வெளியூர் மற்றும் கிராமப்புறங்களில்  இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்கள் நிறுத்த  போதிய இடம் கிடைக்காமல்  அவதிப்படுகின்றனர். கிடைக்கும் இடங்களில்  வாகனங்களை நீறுத்திவிட்டு செல்கின்றனர். இது போன்று நிறுத்திவிட்டு  செல்லும் வாகனங்களை போலீசார் பூட்டி செல்கின்றனர். இதனால், சுற்றுலா  பயணிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில்,  போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி சில இடங்களில் இருந்த  பார்க்கிங்களையும் மூடிவிட்டனர். குறிப்பாக, மார்க்கெட் எதிரே (அரசு  மேல்நிலைப் பள்ளி சாலை) இருந்த பார்க்கிங் மூடப்பட்டதால்,  பல்வேறு தேவைகளுக்காக மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா  பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள  பார்க்கிங்கிற்குள் வாகனங்கள் நிறுத்த முடியாதவாறு தடுப்புகளும் போட்டு  விட்டனர். இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு வரும் பல வாகனங்கள் தற்போது  தடுப்பிற்கு வெளியே சாலையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால்,  இச்சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே,  இப்பகுதியில் மீண்டும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தவோ அல்லது இரு சக்கர  வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் வாகனங்கள்  நிறுத்தாதவாறு நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன  ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு