×

பணி முடிந்து ஓராண்டாகியும் திறப்பு விழா காணாத மருத்துவமனை கட்டிடம்

சூலூர், டிச.11: சூலூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கட்டிடம் இன்னும் திறப்பு விழா காணமால் பாழடைந்து வருகிறது. திறப்பு விழாவுக்கு சூலூர் எம்எல்ஏ.,விடம் தேதி கேட்டால் நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் என காலம் தாழ்த்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. சூலூர் அரசு மருத்துவமனை 36  உள்நோயாளிகள் படுக்கை வசதியுடன் தாலுகா தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.  புறநோயாளிகள் பிரிவில்  இடவசதி குறைவாக உள்ளதால் நோயாளிகள்  சிரமத்திற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து, ரூ.16 லட்சம் செலவில் புதிதாக புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் திறப்பு விழா காணாமல் பாழடைந்து வருகிறது.
இரும்பு கைப்பிடி துருப்பிடித்தும், பூசப்பட்ட சுவர்கள் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. புதிய கட்டிடத்தை திறக்க மருத்துவர்கள், பலமுறை சூலூர் எம்எல்ஏ., கனகராஜிடம் அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. தலைமை மருத்துவரிடம் எப்போது கேட்டாலும் எம்எல்ஏ., நான் ரொம்ப பிசி என காலம் கடத்தி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

Tags : hospital building ,
× RELATED இடைக்கோடு அரசு மருத்துவமனை...