×

கொடுமுடியில் ரூ.18.96 லட்சம் விளைபொருட்கள் ஏலம்

கொடுமுடி, டிச. 11:  கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.18 லட்சத்து 96 ஆயிரத்து 898க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் போனது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான விற்பனை நடந்தது. இதில் 110 விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் முதலில் 4 ஆயிரத்து 640 கிலோ தேங்காய்கள் ரூ.42 ஆயிரத்து 613க்கு ஏலம் போனது. இதனையடுத்து 2 ஆயிரத்து 610 கிலோ கொப்பரை ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 644க்கு ஏலம் போனது. இதில் முதல் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.105க்கும், குறைந்தபட்சமாக ரூ.94.69க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ.96.95க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.09க்கும் ஏலம் நடந்தது.  மேலும் 14 ஆயிரத்து 29.5 கிலோ எள் ரூ.16 லட்சத்து 29 ஆயிரத்து 641க்கு ஏலம் விடப்பட்டது. இதில் சிவப்பு எள் அதிகபட்சமாக கிலோ ரூ.121.91க்கும், குறைந்தபட்சமாக ரூ.102.79க்கும், வெள்ளை எள் அதிகபட்சமாக ரூ.120.81க்கும், குறைந்தபட்சமாக ரூ.105.99க்கும் ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.18 லட்சத்து 96 ஆயிரத்து 898க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடந்தது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்