×

தேயிலை ஏல மையத்திற்கு 26ல் விடுமுறை

கோவை, டிச.11:  கோவை தேயிலை ஏல மைய செயலாளர் குமார் கூறியதாவது: தென்னிந்தியாவில் கோவை, குன்னூர்,  மற்றும் கேரளாவிலுள்ள கொச்சி ஆகிய இடங்களில் தேயிலை ஏல மையம் உள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள் உள்நாடு ரகம் மற்றும் ஏற்றுமதி ரகங்களுக்கான தேயிலைத்தூளை விற்கவும், வாங்கவும் வருகின்றனர்.

கோவை தேயிலை ஏல மையத்தில் வாரம் தோறும் புதன் கிழமை தவறாமல் ஏலம் நடைபெறுகிறது. இந்நிலையில், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் முன்னிட்டு அந்த வாரங்களில் தேயிலை ஏல மையத்திற்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அதன்படி வரும் வாரத்தை அடுத்து வரக்கூடிய, இந்த ஆண்டின் கடைசி வார ஏலம் கிறிஸ்துமஸிற்கு அடுத்த நாள் வருகிறது. இதனால் அதற்கு முதல் நாளான கிறிஸ்துமஸ் நாளன்று விடுமுறை விடப்படுவதால், மறுநாள் ஏலம் நடைபெறாது. அன்றும் விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு கோவை தேயிலை ஏல மைய செயலாளர் ஸ்ரீகுமார் கூறினார்.

Tags : Holidays ,tea auction center ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...