×

ஜாதி குறித்து தவறான தகவல் பதிவு செய்த வழக்கு ஈரோடு கோர்ட்டில் வக்கீல் சரண்

ஈரோடு, டிச. 11: பேஸ் புக்கில் ஜாதி குறித்த தவறான தகவல் பதிவு செய்த வழக்கில் வக்கீல் ஈரோடு கோர்ட்டில் சரணடைந்தார். ஈரோடு காந்தி நகர் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் வக்கீல் ரஞ்சித்குமார். கடந்த மாதம் ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசனிடம் புகார் மனு வழங்கினார். எனது பேஸ்புக் பக்கத்தில் வக்கீல் சாமிநாதன் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பெண்களை பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டார். இது ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வக்கீல் சாமிநாதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகன் முன்னிலையில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது, வக்கீல் சாமிநாதன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கோரினார். இதை ஏற்ற நீதிபதி மோகன், நாள்தோறும் நீதிமன்றத்தில் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு, ஜாமீன் வழங்கினார்.

Tags : lawyer ,court ,Erode ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!