×

தரமற்ற குடிநீர் வழங்குவதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார்

ஈரோடு, டிச. 11: ஈரோட்டில் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்று தண்ணீர் துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கொல்லம்பாளையம் ராமமூர்த்தி வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தங்களது பயன்பாட்டிற்காக வீடுகளில் ஆழ்குழாய் கிணறுகளை அமைத்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆழ்குழாய் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகிக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லாததால் தண்ணீருக்காக அவதியடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை மாநகராட்சி சார்பில் தினமும் ஒரு மணி நேரம் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags : Office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...