×

சொத்தை அபகரித்துக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் விட்ட மகன்

காஞ்சிபுரம், டிச.11: காஞ்சிபுரம் மாவட்டம், மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஷபீரா பீவி (65).இவரின் கணவர் அசனார் (73). இவர்களின்  சொத்தை அடித்து துன்புறுத்தி மகன் ஜாகீர் உசேன் அபகரித்துக் கொண்டதால், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்அவர்கள் அளித்துள்ள புகார் மனு விவரம்:

மேற்கு தாம்பரம்,ரங்கநாதபுரம் முதல் குறுக்குத் தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் வீட்டை என்னையும், என் கணவரையும் அடித்துத் துன்புறுத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி  மகன் ஜாகீர் உசேன் அபகரித்துக்கொண்டார். நாங்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள்.  மகன் ஜாகீர் உசேன் எங்களை அநாதையாக்கி நடுத்தெருவில் விட்டுவிட்டார். இதனால் ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து தாம்பரம் தாசில்தார் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களை ஏமாற்றி  மகன் அபகரித்த சொத்துக்களை மீட்டுத் தரும்படி அந்த மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Tags : parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்