×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மகளிர் சேவை மையம் தொடக்கம்

செங்கல்பட்டு, டிச.11: காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் செங்கல்பட்டு  அரசு மருத்துவமனை இணைந்து ஒருங்கிணைந்த மகளிருக்கான சேவை மையம் துவக்க விழா செங்கல்பட்டு மருதுவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனையின் பொறுப்பு டீன் சுதாகர் தலைமை வகித்தார்.

நிலைய மருத்துவ அலுவலர் வள்ளியரசி முன்னிலை வகித்தார். காஞ்சி மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி. மரகதம் குமரவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மருத்துவ சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.இதில், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான சட்ட உதவி, காவல்துறை உதவி, அவசர கால மீட்பு நடவடிக்கை உள்ளிட்டவைகள் செய்துகொடுக்கப்படும். இந்த மையத்தின் மூலம் பெண்கள் இதை பயன்படுத்திகொண்டு தங்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். என்றார் இதில், மருத்துவர்கள், பொதுமக்கள் சமூக நல அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Women's Service Center ,Chengalpattu Government Hospital ,
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின்...