×

கண்ணாடி கழிவுகளை பொது இடத்தில் கொட்டும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், டிச.11: கண்ணாடிக் கழிவுகளை பொது இடத்தில் கொட்டும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கத் தலைவர் முனுசாமி, கலெக்டர் பொன்னையாவிடம் மனு கொடுத்துள்ளார். மனு விவரம்: மதுராந்தகம் வட்டம், மேலவளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் பாட்டில்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாட்டில் கம்பெனியில் உடைந்த பாட்டில் கண்ணாடித் துகள்களை பொது இடத்தில் கொட்டி விடுகின்றனர். இந்த தனியார் கம்பெனிக்கு மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் வீராணம் ரோட்டில் கிளை நிறுவனம் ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரண்டு கம்பெனியின் கண்ணாடி கழிவுத் துகள்களும் மாம்பாக்கம் அடுத்த வீராணம் ரோட்டில் உள்ள பொது இடத்தில் கொட்டுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், அவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, பொது இடத்தில் கண்ணாடிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : company ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...