×

குமரியில் போலி மதுபானங்கள் சப்ளை விவகாரம் டாஸ்மாக் மதுவை வாங்கி தண்ணீர் கலந்தும் விற்பனை

நாகர்கோவில், டிச. 11:  டாஸ்மாக் பார்களுக்கு போலி மதுபானங்கள் சப்ளை செய்த விவகாரத்தில், டாஸ்மாக் மதுவை வாங்கி அதனை பல பாட்டில்களில் தண்ணீர் கலந்து விற்பனை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் விற்பனையாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தக்கலை அடுத்த மருந்துக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை பாரில் திருட்டுத்தனமாக விற்பனை செய்ய மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதில் அவை அவை அனைத்தும் போலி மதுபானங்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பார் நடத்தி வந்த, மணக்கரையை சேர்ந்த சேம்ராஜ்(51), பூக்கடையை சேர்ந்த கிருஷ்ணபிரசாத்(46), வியன்னூரை சேர்ந்த அனுபிரசாத்(29), மூலச்சல் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர்(54) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. விஜயபாஸ்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  

 விசாரணையில் ஆரல்வாய்மொழி பகுதியை ேசர்ந்த ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி சகாய ஷீபா ஆகியோர் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட போலி மதுபானங்களை அவர்களது வீட்டில் வைத்து பாட்டில்களில் அடைத்து, பார்களுக்கு சப்ளை செய்தது தெரிய வந்தது. இவர்களுக்கு உதவியாக  ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த சுயம்பு இருந்துள்ளார். இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஜெயசீலன் வீட்டில் இருந்து 150க்கும் மேற்பட்ட போலி மது பாட்டில்கள், தண்ணீர் கேன்களில் இருந்த போலி மதுபானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், கேரளாவில் இருந்து ஸ்பிரிட் மற்றும் வாசனை திரவியம் கொண்டுவந்து, தண்ணீரில் கலந்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. கைதான ஜெயசீலன், அவரது மனைவி சகாயஷீபா ஆகியோர் வில்லுப்பாட்டு கலைஞர் என கூறி அவர்கள் ஆரல்வாய்மொழி அருகே வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

 மேலும் டாஸ்மாக் கடைகளில் இருந்து அதிக அளவு மதுபாட்டில்களை வாங்கி அந்த பாட்டிலை மேல் பகுதியில் உள்ள சீலை மெதுவாக திறந்து பாட்டில் உள்ள மதுவை வெளியே எடுத்து அதனை 2, 3 பாட்டில்களில் விகிதமாக பிரித்துள்ளனர். பின்னர் அதில் தண்ணீர் மற்றும் கலர் பொடியை போட்டு 2, 3 மதுபாட்டிலாக தயாரித்துள்ளனர்.  அதனை டாஸ்மாக் கடைகளில் கொண்டு கொடுத்துள்ளனர். இவர்கள் பல டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்களை கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களுக்கும் இதில் தொடர்ப்பு இருக்கலாம் எனபோலீசார் கருதுகின்றனர். இதனால் அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். டாஸ்மாக் வழியாக போலி மதுபானம் விற்பனையானதால், டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர்களிடமும் விசாரணை நடத்த ேபாலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு கேரளாவில் இருந்து ஸ்பிரிட் கொடுத்த கும்பலையும் போலீசார் பிடிக்க முடிவு செய்துள்ளர். அதற்கான தனிப்படையினர் கேரளாவிற்கு சென்றுள்ளனர்.

Tags : Kumari ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!