×

முருங்கைக்காய் விலை உயர்வு கிலோ ₹100க்கு விற்பனை

நாகர்கோவில், டிச. 11:  குமரி மாவட்டத்தில் உள்ள அப்டா, வடசேரி கனகமூலம் சந்தைகளுக்கு நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது. கடந்த வருடம் முருங்கைக்காய் கிலோ ₹180 வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக விலை குறைந்து கிலோ ₹10க்கு விற்பனையானது. பின்னர் சிறிது சிறிதாக உயர்ந்து ₹21க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில், வெளி மாவட்டங்களில் முருங்கைக்காய் உற்பத்தி குறைந்தது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது ஒரு கிலோ முருங்கைக்காய் ₹100க்கு விற்பனையாகி வருகிறது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...