×

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்கக்கோரி பெண்கள் இணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடந்தது

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்தக்கோரி பெண்கள் இணைப்புக்குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நேற்று தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பெண்கள் இணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுமதி தலைைம தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி, மாநில பொருளாளர் ேஜாஸ்பின், வக்கீல் முகமது அலி, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரா, முத்தமிழ் கலைமன்ற தலைவர் முருகையன், பாரம்பரிய பறை இசை நல கலைஞர்கள் சங்க செயலாளர் முருகராகன் உள்பட பலர் பேசினர்.

பெண் உரிமையும், மனித உரிமையாக மதிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை தடுத்து நிறுத்த வேண்டும். வயது வித்தியாசம் பார்க்காமல் பாலியல் வன்முறை செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளான பெண்கள் இணைப்புக்குழுவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பெண்கள் இணைப்புகுழு நிர்வாகி அனிதா நன்றி கூறினார்.

Tags : protest ,Tiruvannamalai ,women ,group members ,children ,
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...