×

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமுமுக, எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், டிச.7: பெரம்பலூரில் தமுமுக சார்பாக பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார். எஸ்எம்ஐ மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது இஸ்மாயில் வரவேற்றார். மாவட்ட திமுக செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட்  கம்யூ. மாவட்டத்தலைவர் செல்லதுரை, இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராசு, திவிக மாவட்டத் தலைவர் துரைதாமோதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மமக மாவட்ட செயலாளர் மீரான்மொய்தீன், தமுமுக மாவட்ட செயலாளர் குதரத்துல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணைச்செயலாளர் அரபாத் சிறப்புரையாற்றினார். மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் இப்ராஹிம் நன்றி கூறினார். எஸ்டிபிஐ: இதேபோல எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் முஹம்மதுரபீக் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் சாகுல்ஹமீது உஸ்மானி, மாவட்ட திமுக செயலாளர் குன்னம் ராஜேந்திரன் மற்றும் கம்யூனிஸ்ட், விசி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராஜ், பாப்புலர் பிரண்ட் மாவட்டத் தலைவர் அபுபக்கர்சித்திக், உள்ளிட்ட பலர் கண்டித்து பேசினர்.

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் தமுமுக சார்பில்  பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்ட தலைவர் கமாலுதீன் தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக்இப்ராஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், திக மண்டல தலைவர் காமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் கோவை அக்பர், வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் தஸ்தகீர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அப்துல்சலாம், கமால், ஷேக், ஜான்பகதூர், அர்ஷத், ஹசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமுமுக மாவட்ட தொண்டரணி செயலாளர் அக்துல்ரஹித் வரவேற்றார். இறுதியில் மாவட்ட பொருளாளர் ஹைதர்ஷரீப் நன்றி கூறினார்.

Tags : demonstration ,DMK Party ,SDPI Party ,Babri Masjid ,
× RELATED திருவள்ளூர் சட்டமன்ற...