×

அயோத்தியி்ல் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், டிச. 7: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஜெயங்கொண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு அரியலூர் கோட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் பழனிசாமி, ரமேஷ், மாவட்ட செயலாளர் திருமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அய்யம்பெருமாள், சபரிராஜன், மற்றும் நிர்வாகிகள் சத்தியபிரகாஷ், முருகானந்தம், மனோகரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்றார். இறுதியில் நகர தலைவர் மணி நன்றி கூறினார்.

Tags : demonstration ,Jayankondham ,Ayodhya Ram Temple ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...