×

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 405 காசாக உயர்வு

நாமக்கல், டிச.7: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 405 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. அதேபோல், ஒரு கிலோ முட்டைக்கோழி ₹84 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ₹80 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் (காசுகளில்): ஐதராபாத் - 397, விஜயவாடா - 392, பர்வாலா - 401, மும்பை - 440, மைசூர் - 415, பெங்களூரு - 410, கொல்கத்தா - 450, டில்லி - 425 காசுகள்.

Tags : Namakkal ,zone ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை