×

தனியார் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாவிட்டால் அபராதம்


விருதுநகர், டிச.7: தமிழில் பெயர்ப்பலலை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சுசிலா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: தமிழகத்தில் உள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் நிறுவனங்களின் பெயர்களை கட்டாயம் முதலில் தமிழிலும், தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் இடம் பெற வேண்டும். பெயர்ப்பலகையில் நிறுவனத்தின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதினால் 5:3 என விகித்தில் எழுத வேண்டும். பிற மொழிகள் சேர்த்து எழுதினால் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் எழுத வேண்டும் என தமிழக அரசும், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் அனைத்து வகை வணிக நிறுவனங்களில் பெயர் பலகை உரிய முறையில் உள்ளதா என தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தமிழில் பெயர் பலகைகள் இல்லாத நிறுவனங்கள், கடைகளுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : companies ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...