×

ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி

காரியாபட்டி, டிச.7: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு காரியாபட்டி பஸ் நிலையத்தில் அதிமுகவினர் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ராமமூர்த்திராஜ் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் விஜயன் முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றியச்செயலாளர் சின்னபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காரியாபட்டி பஸ்நிலையம், முக்குரோடு,  யூனியன் அலுவலகம் போன்ற இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags : Jayalalitha ,
× RELATED சொல்லிட்டாங்க…