×

வீரபாண்டி கவுமாரி அம்மன் கோயிலில் அக்னிசட்டிகள் போடும்

தேனி, டிச. 7: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே உள்ள அக்னி சட்டிகள் போடும் தொட்டியில் மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் எட்டு நாட்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
திருவிழாவின்போது, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அக்னிச்சட்டி எடுத்தும், ஆயிரம் கண்பானை எடுத்தும், மாவிளக்கு எடுத்தும்,  அங்கபிரதட்சனம் செய்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர்.

அக்னிசட்டி எடுத்து வரும் பக்தர்களின் அக்னிச்சட்டிகளை செலுத்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் முன்பாக தொட்டி உள்ளது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த அக்னிச்சட்டிகளை இந்த தொட்டியில் செலுத்திச் செல்வர். இந்த தொட்டியில் சமீபத்தில் பெய்த மழையால் நீர் தேங்கி பாசனம்படிந்து பச்சைநிறமாக மாறியுள்ளது. நல்லநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதால் மழைநீர் தேங்கியுள்ள இந்ததொட்டியில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோயில் நிர்வாகம் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Virbhandhi kaumari ,place ,Amman ,Akkinutikalai ,
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...