×

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, டிச. 7: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சி சார்பில் தேனி நகர் பங்களாமேட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் அபுபக்கர்சித்திக் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் அல்லாபக்ஷ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கலீல்ரஹ்மான், மாவட்ட பொருளாளர் அபூபக்கர் சித்திக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சையதுகாதர், முகமதுஷாகின், ரஹ்மத்துல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர்பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் யாசர்அரபாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தின்போது, பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Babri Masjid ,Teen ,
× RELATED தாவுத் கூட்டாளி அப்துல் கரீம் விடுவிப்பு