×

சித்தர் கோயிலில் அமாவாசை விழா

சிங்கம்புணரி, டிச.7: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் நேற்று அமாவாசை விழா நடைபெற்றது. இதில் காலையில் சித்தர் முத்துவடுகநாதருக்கு பால் தயிர் விபூதி சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், பழச்சாறுகள் என 21 வகையான அபிசேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : moon festival ,Siddhar ,
× RELATED வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது