×

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் சீமை கருவேல மரங்களால் ரேசன் கடை ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம், டிச.7: நயினார்கோவில் சமத்துவபுரத்தில் ரேசன் கடையை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே நயினார்கோவிலில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. 100 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக சமத்துவபுரத்தில் பூங்கா, ரேசன் கடை உள்ளிட்ட வசதிகள் தமிழக அரசால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவைகள் முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது.  

தற்போது சமத்துவபுரத்தில் உள்ள ரேசன் கடை முழுவதையும் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் ரேசன் கடைக்கு செல்ல முடியவில்லை. பகல் நேரங்களில் கூட விஷபூச்சிகள் கடையின் உள்ளே வந்து விடுகிறது. பொதுமக்களின் நலன் கருதி ரேசன் கடையை சுற்றிலும் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ரேசன் கடையை சுற்றிலும் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். சமத்துவபுரம் முழுவதும் பல இடங்களில் கருவேல மரங்கள் நிறைந்துள்ளன. அதிகாரிகள் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : Jatitha Ratna ,
× RELATED தெருக்களுக்கு குடிநீர் செல்வதில்...