×

உலக மண்வள தினவிழா

ஆர்.எஸ்.மங்கலம், டிச. 7: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள அழகர் தேவன்கோட்டையில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ். மங்கலம் வட்டார வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளுக்கான விழா உதவி இயக்குநர் மோகன்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மண் வளம் பற்றி விளக்கி கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் நாகராஜ், மண் வளம் பாதுகாப்பு பற்றி எடுத்து கூறினார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்னலெட்சுமி மண் மாதிரி சேகரிப்பு மற்றும் செயல் விளக்கத்தினை செய்து காண்பித்தார். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மாவட்டம் அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல் துர்நாற்றத்தால் சிரமம் பரமக்குடி உழவர்சந்தை பகுதியில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விமல், பரமக்குடி.போக்குவரத்திற்கு இடையூறு பார்த்திபனூர் வாரச்சந்தை கமுதி சாலையோரத்தில் அமைக்கப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லெட்சுமணன், பார்த்திபனூர். புகார் பெட்டி தெரிஞ்சுக்கலாம் வாங்க... குரங்கு ஒரு பாலூட்டி விலங்கு. வால்நீளம் தவிர்த்து 14 முதல் 16 செமீ.முதல் ஒருமீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உண்டு. குரங்குகள் பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள் பிற சிறிய உயிரினங்களை உண்ணும். குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சி கொள்கையை டார்வின் முன்மொழிந்துள்ளார். குரங்குகளுக்கு 2 மூளைகள் உண்டு. ஒன்று உடலையும், மற்றொன்று வாலையும் செயல்பட வைக்கிறது.

Tags : World Earth Day ,festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!