×

அம்பேத்கர் நினைவு தினம்

கீழக்கரை, டிச.7: அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரச்சார குழு மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்தது. மாநில துணை தலைவர் குப்புராம், மாநில எஸ்.சி அணி செயலாளர் புவேந்திரன், மாவட்ட செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலையில் அப்பேத்கர் சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் நிர்வாகிகள் ஆத்ம கார்த்தி, வாசுதேவன், காந்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பரமக்குடியில் பாஜக சார்பாக அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் முரளி தலைமை வகித்தார். மாநில எஸ்சி.எஸ்டி. மாநில நிர்வாகி இளங்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags : Ambedkar Memorial Day ,
× RELATED அம்பேத்கரின் நினைவு தினம்: எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை