×

கொடைக்கானலில் ஆபத்தான மரங்களை அகற்ற நோட்டீஸ்

கொடைக்கானல், டிச. 7: கொடைக்கானலில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் நகர் பகுதியில் கஜா புயலால் சுமார் 200 மரங்கள் விழுந்தன. இதனால் பல வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. கல்லறைமேடு பகுதியில் மரம் விழுந்ததில் காரில் சென்ற கேரள சுற்றுலாப்பயணி நீலிமா (25) பலியானார். இந்நிலையில் சமீபத்தில் புயல் சேதங்களை பார்வையிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆபத்தான மரங்களை அகற்ற உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், கொடைக்கானல் நகர் பகுதியில் தனியார் இடங்களில் விழும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்தது. இந்த மரங்களை அவரவர்களே வெட்டி அகற்ற வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 ன் படி உட்பிரிவு 218, 219 (1), (2)ன் படி சுமார் 50 பேருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதேபோல் இடியும் நிலையில் உள்ள தாங்கு சுவர்களையும் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்ற 7 நாட்களில் இதுபோன்ற ஆபத்தான மரங்கள், இடியும் நிலையில் உள்ள சுவர்களை அப்புறப்படுத்தாவிட்டால் ஏற்படும் இழப்புகளுக்கு அவர்களே பொறுப்பு என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...