மணல் திருட்டை தடுக்க நள்ளிரவில் ஆற்றுப்பகுதியில் குவிந்த திமுகவினர் தாடிக்கொம்புவில் பரபரப்பு

திண்டுக்கல், டிச. 7: மணல் கொள்ளையை தடுப்பதற்காக தாடிக்கொம்பு சந்தானவர்த்தினி ஆற்றில் திமுகவினர் நள்ளிரவில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தாடிக்கொம்பு சந்தானவர்த்தினி ஆற்றில் மணல்கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக இரவில் இதுபோன்ற நிலை அதிகம் உள்ளது. பொதுமக்கள் புகார் கூறினாலும் மணல்திருட்டு தொடர்ந்து கொண்டே இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தானவர்த்தினி ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அவர் தலைமையில் திமுகவினர் நள்ளிரவு 11.40க்கு சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றனர். இதையறிந்ததும் மண் அள்ளிய லாரிகள் அங்கிருந்து விரைந்து சென்று விட்டன. ஆற்றின் கரையோரத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 50அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குடகனாறு பகுதியை பார்வையிட சென்றனர். இதுகுறித்து ஐ.பெரியசாமி கூறுகையில், சுமார்ரூ.100 கோடிக்கு மேல் மணல் அள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐவிசாரணை நடத்த வேண்டும் என்றார். நள்ளிரவில் மணல்கொள்ளைக்கு எதிராக திமுகவினர் ஆற்றுப்படுகையில் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: