×

21 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் முழு இரவு தர்ணா

வேடசந்தூர், டிச. 7: 21 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் முழு இரவு தர்ணா போராட்டம் நடத்தினர்.
தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வேண்டும், கல்வி தகுதியை பட்டதாரியாக மாற்ற வேண்டும், சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமநிர்வாக அலுவலர்கள் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார்.

இதில் வட்ட தலைவர் கண்ணன், செயலாளர் சுரேஷ்பாபு, பொருளாளர் ராஜேஷ்குமார், மாவட்ட தகவல் தொடர்பு செயலாளர் பாரதி உள்பட பலர் க,ந்து கொண்டனர். *வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த தர்ணாவிற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். தாலுகாவில் பணியாற்றும் 37 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு முதல்நாள் துவங்கி மறுநாள் காலை வரை போராட்டம் நடத்தினர். இதில் வட்டார தலைவர் பாலசுப்பிரமணி, செயலாளர் சரவணகுமார், பொருளாளர் முத்துகிருஷ்ணன், துணை செயலாளர் செல்வகோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Village Administrative Officers ,
× RELATED கீழ்வேளூர் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..!!