×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு விவரங்கள் கணினியில் பதிவேற்றம்

நாகை,டிச.7:கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதங்கள்  குறித்த கணக்கெடுப்பு விவரங்களை கணிணியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது  வருகிறது. இதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டு  ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட “கஜா” புயலால் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களில் புயலால் சேதமடைந்துள்ள தென்னை, மா, முந்திரி, வாழை, பலா உள்ளிட்ட விவசாய பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை கம்ப்யூட்டர் பதிவேற்றம் செய்யும் பணியினை ஓரிரு நாட்களில் முடித்திட பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கணக்கெடுப்பு பணி மற்றும் பதிவேற்ற பணி முழுமையாக நிறைவடைந்தவுடன், சேதங்கள் குறித்த விவரங்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். முதலமைச்சர் உத்தரவின்படி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாய பயிர்களின் சேதங்களுக்காக அறிவித்த நிவாரண தொகை மற்றும் இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.


Tags : areas ,storm ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...