×

கஜா புயலில் முழுமையாக சேதமான பைபர் படகுகளுக்கு ரூ.9 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் மீனவர் கிராம பஞ்சாயத்தார் வலியுறுத்தல்

நாகை,டிச.7: கஜா புயலில் முழுமையாக சேதமான பைபர் படகுகளுக்கு ரூ.9 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கிராம பஞ்சாயத்தார்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாகை மாவட்டம் கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுகா மீனவர்கள் கிராம பஞ்சாயத்தார்கள் ஆலோசனை கூட்டம் செருதூர் எல்லையம்மன் சமுதாய கூடத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில் செருதூர், வேளாங்கண்ணி,  காமேஷ்வரம், விழுந்தமாவடி,  விழுந்தமாவடி வடக்கு, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆர்காட்டுதுறை, மணியன் தீவு ஆகிய கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்  வேளாங்கண்ணி முதல் கோடியக்கரை வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களில் உள்ள அனைத்து பைபர் படகுகளும் கஜா புயலால் முழுசேதம் அடைந்ததாக அரசு அறிவிக்க வேண்டும். அனைத்து பைபர் படகுகளுக்கும் முழு சேதமாக  அரசு கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பைபர் படகுகளுக்கும் சேத நிவாரணமாக ரூ.9 லட்சம் அறிவிக்க வேண்டும்,  பெரிய விசைப்படகுகளுக்கு முழு சேதமாக ரூ.20 லட்சமும், பகுதி சேதமாக ரூ.10 லட்சமாக அரசு அறிவிக்க வேண்டும், கஜா புயலால் பாதிப்படைந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ள காலங்களில்  ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் நாளொன்றுக்கு ரூ.500 வீதம் அரசு வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்மானங்களை அரசு 12.12.2018க்குள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுகா மீனவர்கள் நாகை, காரைக்கால் மாவட்ட அனைத்து மீனவ கிராமங்கள் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : storm ,Ghazi ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...