×

கோமாரி நோயால் கறவை மாடுகள் இறப்பு தடுப்பூசி போட விவசாயிகள் கோரிக்கை

கரூர்,டிச.7: கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வீரராக்கியம் பகுதியில் கறவைமாடுகள்  கோமாரி நோய் தாக்கப்பட்டு இறந்துள்ளன. எனவே பிற மாடுகளுக்கு நோய் பரவாமல்  தடுக்க தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், கால்நடைத் துறை அமைச்சருக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில்,  கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்  வீரராக்கியத்தில் 18 கறவை மாடுகள் கோமாரி நோய் தாக்கி இறந்து விட்டன. தமிழக அரசு உடனடி  நடவடிக்கை மேற் கொண்டு அப்பகுதியில் மேலும் நோய் பரவாமல் இருக்க  கால்நடைகளுக்கு உரிய தரமான மருந்து கள் மூலம் தடுப்பூசி போட உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். ஏற்கனவே போட்ட தடுப்பூசி களின் மருந்துகள் தரம்  குறைவானது என கால்நடை மருத்துவர்கள் மூலம் கண்டறியப்பட்டுள் ளது.மேலும்  கறவை மாடுகளை இழந்த 18நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என  குறிப்பிட்டுள்ளார்.


Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்