×

சம்பா நெற்பயிரில் கொட்டும் பூக்கள் விவசாயிகள் கவலை

கரூர், டிச.7: சம்பா நெற்பயிரில் பூக்கள் கொட்டுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கர்நாடகத்தில்  பெய்த கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து  கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 7ஆண்டுகளுக்கு பின்னர் காவிரி பாசன பகுதியில்  விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். சுமார் 7ஆயிரம்  ஏக்கரில் சாகுபடி செய்ய நாற்றுவிட்டு நடவு பணிகள் செய்யப்பட்டுள்ளது. நடவு  விட்டு மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் நெற்பயிரில் பூக்கள் கொட்டுகிறது.  இதனால் விவசாயிகள கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை  அவ்வப்போது பெய்து வருகிறது. நெற்பயிர்கள் வளர்ந்தநிலையில் பூக்கள்  கொட்டும்போது கதிரில் பால்பிடிக்காது. இதனால் மகசூல் குறையும். 130முதல்  140நாட்ககளில் அறுவடை செய்ய  லாம் என்ற நிலையில் விவசாயிகள் இப்படி ஒரு  நிலைக்கு ஆட்பட்டுள்ளனர். இதுவரை வறட்சி யால் தவித்து வந்தோம், இந்த ஆண்டு  தண்ணீர் பிரச்சனை இல்லையென்றாலும், நடவுபணிக்கு ஆட்கள் பற்றாக்குறை, இலை  சுருட்டுப்புழு தாக்குதல் அதற்கு மருந்து அடித்து ஒவ்வொன்றாக சமாளித்து  வருகிறோம். இப்போது பூக்கொட்டும் பிரச்சனை வந்துள்ளதால் அதனை சமாளிக்க  வழிதேடிக்கொண்டிருக்கின்றோம் என்றனர்.



Tags : Samba ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை