×

பொங்கல் பண்டிகைக்கு கரூரில் பானை தயாரிக்கும் பணிகள் மும்முரம் ரூ.300க்கு விற்க முடிவு

கரூர்,டிச.7: பொங்கல் பண்டிகைககாக பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெறுகிறது. ஒரு  பெரிய பானை ரூ.300க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை  ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை நெரு ங்கி வருவதால்  கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மண்பானை தயாரிப்பு பணிகள் விறு,  விறுப்பாக நடை பெறுகிறது.பொங்கல் பண்டிகைக்கு மண்பானை பயன்படுத்தும்  வழக்கம் அதிகரித்து வருகிறது. நகர பகுதி யில் இருப்பவர்கள் கூட அதிக அளவில்  மண்பானை பயன்படுத்தி பொங்கலிடுகின்றனர்.இதனால் வியாபாரிகள் பானைகள் கேட்டு  பானை செய்வோரை அணுகி வருகின்றனர். இது குறித்து மண்பானை செய்யும் தொழிலாளர்கள் கூறுகையில், பானை  செய்வதற்கான மண் ஏரி மற்றும் குளங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.  இவ்வகை மண் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது.ஒரு டிப்பர் லாரி களிமண்  ரூ.20ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி, தேவைக்கேற்ப பானை செய்பவர்கள்  பிரித்துக் கொள்வோம். களிமண், மணல், கரும்புச்சக்கை போன்றவை மூலப்பொருளாக  பயன்படுத்தப்படுகிறது.

மூலப்பொருட்கள் தொட ர்ந்து விலை ஏறிக்கொண்டே  போவதாலும், போதுமான வருமானம் கிடைக்காத நிலையிலும் இளம் வயதினர்  மண்பாண்டங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தொடர்ந்து இத்தொழிலில்  ஈடுபடுபவர்கள் மட்டுமே மண்பாண்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.பொங்கல்பானைகள் அளவுக்கு தகுந்தபடி விலை வைக்கப்படுகிறது. சிறிய பானை ரூ.50ல் தொடங்கி  பெரியபானை ரூ.300வரை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.


Tags : festivals ,Karur ,
× RELATED ஹோலி பண்டிகை கொண்டாட்டம்