மணப்பாறை அருகே வினோபாவா நகரில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் தெருவிளக்குகள் எரியவில்லை

மணப்பாறை, டிச.7: மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வினோபாவா நகர். இந்நகரில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமங்களில் உள்ள தெரு விளக்குகளில் மின் சிக்கனம் கருதி சூரிய ஒளி (சோலார் மின்விளக்கு) மின்கம்பங்கள் நடப்படுகிறது. இதேபோல், வினோபாவா நகரின் சாலையோரத்திலும், தெருக்களிலும் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் வீசிய கஜா புயலில் சூரிய மின் சாதன கம்பங்கள் கீழே சாய்ந்துள்ளன. இதனால்

தெரு விளக்கு எரியாமல் உள்ளதாகவும், இரவு நேரத்தில் செல்பவர்கள் அவதிக்குள்ளாவதாகவும், அருகில் வசிப்பவர்கள் விஷ வண்டுகளுக்கும், பூச்சிகளுக்கும் பயந்து குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.மேலும், இப்பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் வேலைக்குச் சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம். இரவில் தெருவிளக்குகள் எரியாததால் இருளிலேயே வர வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சூரிய ஒளி மின்கம்பங்களை சரி செய்து தெரு விளக்குகள் எரியச்செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: