×

லால்குடி அருகே சேதமான மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் 45 விவசாயிகள் கைது

லால்குடி, டிச.7: லால்குடி அருகே சேதமடைந்த மக்காசோளப்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதில்  45 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சுமார் 52 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்காச்சோளபயிர்களில் இதுவரை இல்லாத அளவில் வீழ்படைபூச்சிகள் பயிரின் குருத்து மற்றும் கதிர்களில் உருவாகி பயிர்களை தின்று அழித்து வருகிறது. இதனால் அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் வரை செலவு செய்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆந்திரா முதல்வர் மக்காசோளம் பயிரிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நிறுவனங்கள் மூலமாக சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை பெற்று தந்ததுபோல் தமிழக அரசும் ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு மக்காச்சோள விதை நிறுவனம் அல்லது அரசு மூலம் வழங்கிட முன் வரவேண்டும் என திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய பகுதியான கல்லக்குடி, மால்வாய், வரகுப்பை, மேலரசூர் மற்றும் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதியான பளிங்காநத்தம், சன்னாவூர்,  காவட்டாங்குறிச்சி பகுதிகளிலிருந்து 45 விவசாயிகள் கலந்து கொண்டு திருச்சி -சிதம்பரம் சாலை கல்லக்குடி மால்வாய் நால்ரோட்டில்  சாலைமறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் கோஷமிட்டபடி சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்த போலீஸார் 40 விவசாயிகளை கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர். முன்னதாக மறியல் செய்யபோவதாக அறிவித்திருந்த அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய மாநிலத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் மற்றும் நிர்வாகிகளையும் லால்குடி டிஎஸ்பி ராஜசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், எஸ்ஐ சரவணகுமார், ரேணுகா ஆகியோர் கைது செய்தனர்.

Tags : maize crops ,Lalgudi ,
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...