×

தஞ்சாவூர் ஜோஸ் ஆலுக்காஸில் நகை கண்காட்சி துவக்கம்

தஞ்சை, டிச. 7: தஞ்சாவூர் ஜோஸ் ஆலுக்காஸில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்த வாரம்தோறும் ஒரு பரிசு என்ற முறையில் சிறந்த ஸ்லோகன் எழுதும் போட்டி நடந்தது.இதில் முதல்வார பரிசாக மிக்சியை மேலதிருப்பூந்துருத்தி சந்திரசேகரன், 2வது வார பரிசாக காஸ் ஸ்டவ்வை தஞ்சை அனிதா, 3வது வார பரிசாக வாசிங்மெஷினை தஞ்சை வரதராஜன், 4வது வார பரிசாக பிரிட்ஜை ஜான்சி ஜீலியஸ் ஆகியோர் பெற்றனர்.மேலும் தஞ்சாவூரில் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி 10ம் ஆண்டு தொடக்க விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 5ம் தேதி முதல் ஆன்டிக் மற்றும் டெம்பிள் நகை கண்காட்சி துவங்கியது. இதில் நகை வாங்குபவர்களுக்கு வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மேலும் வைரத்தின் மதிப்பில் 20 சதவீத தள்ளுபடியும், தங்க நகை சேதாரத்தில் 30 சதவீத தள்ளுபடியும், நகை வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.

உங்கள் பழைய நகைக்கு எடைக்கு எடை புதிய நகையாக மாற்றி கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவை ஜெயின்ட் மார்சினா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜெனட் ரவீந்திரன், துணை முதல்வர் வர்ஷினியா ஜெயந்தி, டாக்டர்கள் முகமது சமீர், நஷானா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். விழாவை கிளை மேலாளர் ஹென்சன், துணை மேலாளர் மணிகண்டன், அக்கவுண்ட்ஸ் மேலாளர் ஹரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.



Tags : Exhibition ,Thanjavur Jose Alokkas ,
× RELATED சென்னையின் முதல் பேனா கண்காட்சி!