×

விவசாய மின் இணைப்பு: மொபைல் எண் பதிவு செய்ய வலிவுறுத்தல்

திருப்பூர், டிச.7: திருப்பூர் மின் கோட்டத்தில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளவர்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன் அறிக்கை:திருப்பூர் மின் கோட்டத்தில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது மொபைல் எண்ணை அவிநாசி ரோடு குமார் நகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். விண்ணப்பதாரர்கள் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த ஒப்புகை சீட்டு நகலுடன் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...