×

ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டி,டிச. 7: இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் பயணம் செல்வதாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படும் நிலையில், இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துச் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஹெல்மெட் அவசியம் குறித்து உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள பைக்காரா காவல் நிலையம் சார்பில் ஹெல்மெட் அவசியம் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கர்நாடகம், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பைக்காரா காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சஞ்சீவன் மற்றும் போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags : Awareness show ,
× RELATED கடலூரில் முதன்முறையாக ஃபன் ஸ்ட்ரீட்;...