தருவைகுளம் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்

குளத்தூர்,டிச.6: குளத்தூரையடுத்த தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு மூலம் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் அன்டோரூபன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சேவியர் முன்னிலை வகித்தார். தருவைகுளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அமலதாசன், மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். தருவைகுளம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் லூர்துராஜ், கல்வியின் கரங்கள் அறக்கட்டளையின் இயக்குநர் மார்செல்செரின், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் ஞானபிரகாசம், பாண்டியன் கிராமவங்கி கிளை மேலாளர் கனகராஜ், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மாரிப்பாண்டி, ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர். ஆசிரியை ரோஸ்லின் நன்றி கூறினார்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

நாசரேத்.டிச.6: நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சமூக வலை தளங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அல்பர்ட் வரவேற்றார். முன்னாள் எம்.பி ஏ.டி.கே. ஜெயசீலன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் பேசினர். சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்களையோ, கருத்துக்களையோ பதிவு செய்தல் கூடாது, மற்றவர்கள் தங்களுக்கு அனுப்பி வைப்பதை பகிர்தல் கூடாது  என மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சமூக வலைதளங்கள் குறித்து துண்டு பிரதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் நன்றி கூறினார்.

Related Stories: