தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம்

ஓட்டப்பிடாரம், டிச.6: ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன் தலைமையில் குறுக்குசாலையில் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. குறுக்குச்சாலை பஜாரில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவ படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன், முன்னாள் எம்.எல்,ஏ சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் காமாட்சி (எ) காந்தி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தார் ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், அய்யாதுரை பாண்டியன், விஜயபாண்டியன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சுப்புராஜ், கருப்பசாமி, சேகர், பெரியமோகன், கண்ணன், ஆறுமுகசாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.                                                                                                                                       

 மேலும் எப்போதும்வென்றான், பசுவந்தனை, பாஞ்சாலங்குறிச்சி, இந்திராநகர், கவர்னர்கிரி, புதியம்புத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ மோகன் செய்திருந்தார்.    தூத்துக்குடி: தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள அதிமுக  அமைப்புச்செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடந்த  நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு  அமைப்புசாரா ஒட்டுநரணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் கட்சியினர்  மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில்  முன்னாள் மாநகர செயலாளர் ஏசாதுரை, ஒன்றிய செயலாளர்கள் செம்பூர்  ராஜநாராயணன், ராமச்சந்திரன், மாநகர வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், தலைமை   பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட  எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலட்சுமணன், பட்டணம் கணேசன், மாவட்ட  அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர்  முள்ளக்காடு செல்வக்குமார், சிவத்தையாபுரம் விவசாய சங்க தலைவர் குணசேகரன்,  மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ், அதிமுக நிர்வாகிகள் சந்தணம், அந்தோணி  சேவியர், கோகிலா, வக்கீல் முனியசாமி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  தூத்துக்குடி தெற்குமாவட்ட அ.ம.மு.க. அலுவலகத்தில் மாநில மீனவரணி இணை  செயலாளர் சுகந்தி கோமஸ் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணி கிரேஸி, இணை  செயலாளர் விஜயலெட்சுமி பொன்ராஜ், தொழிற்சங்க துணை தலைவர் சண்முககுமாரி,  செயலாளர் சிவதுரையரசன், பகுதி செயலாளர்கள் எட்வின்பாண்டியன்,  கோட்டாளமுத்து, அசோக்குமார், இளைஞரணி மருது, முத்து உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

புதூர் ஒன்றியம், பேரூர் அதிமுக சார்பில் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதூர் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய ெசயலாளர் ஞானகுருசாமி தலைமை வகித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் ஒன்றிய தலைவர் தனஞ்செயன், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் வெம்பூரனார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயவேல், துணைத்தலைவர் ஜெயவேல், பேரூராட்சி செயலாளர் ஆண்டி, மாவட்ட பிரதிநிதி விமல் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் பேப்பர் பாண்டி, மாரிச்சாமி, அய்யனார். மாரிச்சாமி, சமயராஜ், மாரிப்பாண்டி, சமயராஜ், செல்வராஜ், சங்கரபாண்டியன், முனியசாமி, கணேசன், சுரேஷ், கண்ணன், பால்சுப்பையா, நாகுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி 56வது வார்டு அத்திமரப்பட்டி எம்ஜிஆர் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு அத்திமரப்பட்டி பகுதி அதிமுகவினர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு 56வது வார்டு அதிமுக வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

 வட்ட செயலாளர்கள் ராஜசேகர், மாரியப்பன், ஜெயகிருஷ்ணன், சேகர், கோபி, அத்திமரப்பட்டி பகுதி அதிமுக தலைவர் சக்கையா, விவசாய சங்க தலைவர் அழகுராஜா ஜெபராஜ், அதிமுக நிர்வாகிகள் செல்லத்துரை, ராமர், ரஜினி, ராசியம்மாள், சக்தி, பட்டுக்கனி, மணிகன்டன், கோபால், சந்திரன், அதிமுக ஒருங்கினைப்பாளார் சிவா, ராமர், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   திருச்செந்தூர்: திருச்செந்தூர் காந்தி காய்கறி தினசரி மார்க்கெட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் வடமலைபாண்டியன், காந்தி காய்கறி தினசரி மார்க்கெட் சங்கத் தலைவர் பழக்கடை திருப்பதி மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், மாவட்ட அதிமுக பொருளாளர் ஜெபமாலை, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் லிங்ககுமார், ஹரிகிருஷ்ணன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணை செயலாளர் நடுவூர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.    செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமை வகித்தார். ஐயப்பன் முன்னிலை வகித்தார். கருங்குளம் மாரியப்பன், முருகன், சிதம்பரம், கதிரேசன், வி.கோவில் பத்து செல்வராஜ்,  தூதுகுழி செந்தாமரை உள்பட பலர் கலந்துகொண்டனர். வசவப்புரம், அனவரதநல்லூர், வல்லநாடு , தெய்வச்செயல்புரம் ஆகிய இடங்களிலும் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: