×

திருவண்ணாமலையில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை, டிச.7: திருவண்ணாமலையில் நேற்று நடந்த உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சார்பில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நடமாடும் எச்ஐவி-எய்ட்ஸ் பரிசோதனை வாகனத்தில் ரத்த பரிசோதனை செய்து கொண்டார்.அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்ட மேலாளர் ஆர்.கவிதா வரவேற்றார். இதில் டிஆர்ஓ ரத்தினசாமி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) ஆர்.மீரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.தில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் எய்ட்ஸ் பரிசோதனை 2016-2017ம் ஆண்டு 1,30,320 நபர்களுக்கும், 2017-2018ம் ஆண்டு 1,43,260 நபர்களுக்கும் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்தவர்களில் 2016-2017ம் ஆண்டு 0.24 சதவீதம் நபர்களுக்கும், 2017-2018ம் ஆண்டு 0.20 சதவீதம் நபர்களுக்கும் எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.நமது மாவட்டத்தில் 5,450 நபர்கள் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது எய்ட்ஸ் நோய் குறைந்து வந்தாலும், இன்னும் அதிகமான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு தேவை என்பதற்காக உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நோய் யாருக்கு வேண்டும் என்றாலும், எப்படி வேண்டும் என்றாலும் வரலாம். நாம் அனைவரும் எப்படி உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை என அனைத்து பரிசோதனைகளும் செய்து கொள்கிறோமோ, அதுபோல் எய்ட்ஸ் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நோயின் தாக்கம் முன்னரே கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சை மேற்கொண்டு முற்றிலும் குணப்படுத்திட முடியும். இன்றைய காலத்தில் மருத்துவ வளர்ச்சி அதிகமாகி உள்ளது. அனைவருக்கும் நோய் குறித்த விழிப்புணர்வு தேவை.எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை ஊரே ஒதுக்கி வைத்த காலம் மாறி, அவர்களும் தற்போது சமமாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். நோய் குறித்த ஆரம்ப பரிசோதனை மிகவும் அவசியம், அப்போது தான் நோயின் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.
வ்வாறு அவர் பேசினார்.இதைத்தொடர்ந்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி இரண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ₹1000ம் வழங்கினார். மேலும், எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றி வரும் இலக்கு பணிகள், தொண்டு நிறுவனங்கள், விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆகியோருக்கு பாராட்டு கேடயம், சான்றிதழ் வழங்கினார். பின்னர் நடந்த சமபந்தி போஜனத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு அனைவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.

Tags : Collector ,Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...