×

பாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், டிச.7:  பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ தெற்கு மாவட்டத் தலைவர் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அபுபக்கர், ஜியாவுல் ஹக், ஜாபர் ஷெரீப், ஷாகுல், ஜாகீர், அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் நாகூர் மீரான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைப் பொதுசெயலாளர் தீனன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.வி.மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பாசறை செல்வராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, காஞ்சி மக்கள் மன்றம் ஒருங்கிணைப்பாளர் மகேஷ், தன்னாட்சி தமிழகம் அமைப்பாளர் தாண்டவமூர்த்தி, நாம் தமிழர் கட்சி செல்வம், ஐந்திணை கலை பண்பாட்டு மையம் அமைப்பாளர் காஞ்சி அமுதன், பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் வெற்றித்தமிழன், திராவிடர் விடுதலைக் கழகம் ரவிபாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். பாபர் மசூதி பகுதியில் சட்டவிரோத தற்காலிக வழிபாட்டு அமைப்பை அகற்ற வேண்டும், வாக்குறுதி அளித்தபடி பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags : Babri Masjid ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...