×

வேலூர் தாலுகாவில் முறைகேடாக பயன்பாட்டில் இருந்த ஆயிரம் தனி நபர் ஸ்மார்ட் ரேஷன் கார்டு நீக்கம் பொது வினியோகத்துறை அதிகாரிகள் ஆய்வில் சிக்கியது

வேலூர், டிச.7:வேலூர் தாலுகாவில் முறைகேடாக பயன்படுத்திய 1,000 தனி நபர் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பொது வினியோகத்துறை அதிகாரிகள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கினர்.பொது வினியோகத்துறை மூலம் வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் ரேஷன் கார்டாக மாறியது. தொடர்ந்து ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஏராளமான போலி கார்டுகள் கண்டறியப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டன.தொடர்ந்து ஒரே குடும்பத்தில் 2 கார்டுகள் வைத்திருப்பவர்களை கண்டறியும் பணியில் பொது வினியோகத்துறையினர் ஈடுபட்டனர். அதேபோல் வேலூர் தாலுகாவிலும் ஒரே குடும்பத்தில் வசித்துக்கொண்டு 2 கார்டுகள் பயன்படுத்தி வரும் பயனாளிகளை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் முறைகேடாக பயன்படுத்திய 1,000 தனி நபர் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கடந்த 11 மாதங்களில் கண்டறியப்பட்டன. இதில் 350 பயனாளிகள் தகுதியானவர்கள் என்று தெரிய வந்துள்ளதாக பொது வினியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : individuals ,taluk ,Vellore ,
× RELATED தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ; தீயணைப்பு துறையினர் அணைத்தனர்